தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் குயிண்டன் டி காக். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அப்போது கேப்டனாக இருந்த பாப் டூ பிளேசிஸ் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தொடக்க வீரர் குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெஸ்ட் கேப்டனாகவும் டி காக்கை நியமிப்பதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இம்மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடாவுள்ளது.
-
Quinton de Kock will captain your #Proteas as the squad prepares to take on @OfficialSLC in the #BetwayTest Series.
— Cricket South Africa (@OfficialCSA) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
3 maiden call-ups include Glenton Stuurman, Sarel Erwee and Kyle Verreynne.
Rabada and Pretorius remain out of action due to injury#SAvSL #SeeUsOnThePitch pic.twitter.com/BDdL6RfsvW
">Quinton de Kock will captain your #Proteas as the squad prepares to take on @OfficialSLC in the #BetwayTest Series.
— Cricket South Africa (@OfficialCSA) December 11, 2020
3 maiden call-ups include Glenton Stuurman, Sarel Erwee and Kyle Verreynne.
Rabada and Pretorius remain out of action due to injury#SAvSL #SeeUsOnThePitch pic.twitter.com/BDdL6RfsvWQuinton de Kock will captain your #Proteas as the squad prepares to take on @OfficialSLC in the #BetwayTest Series.
— Cricket South Africa (@OfficialCSA) December 11, 2020
3 maiden call-ups include Glenton Stuurman, Sarel Erwee and Kyle Verreynne.
Rabada and Pretorius remain out of action due to injury#SAvSL #SeeUsOnThePitch pic.twitter.com/BDdL6RfsvW
இத்தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் டி காக் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், டெஸ்ட் அணிக்கான நிரந்தர கேப்டனை நியமிக்கும் வரை டி காக், இந்த பொறுப்பை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இலங்கை டெஸ்ட் தொடர்:
- முதல் டெஸ்ட் - டிசம்பர் 26 - 30 - செஞ்சுரியன்
- இரண்டாவது டெஸ்ட் - ஜனவரி 02-07 - ஜோகன்னஸ்பர்
இதையும் படிங்க:பிபிஎல்: ஃபார்முக்கு திரும்பிய ஸ்டோய்னிஸ்; தொடர் வெற்றியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!