இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா 28 ரன்களிலும், விராட் கோலி 56 ரன்களிலும் அவுட்டானார். தவான் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டு 98 ரன்களில் அவுட்டானார்.
ஆனால், கே எல் ராகுலும், அறிமுக வீரராக களம் இறங்கிய க்ருணால் பாண்ட்யாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்கள் மளமளவென அதிகரித்தன. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. கே. எல் ராகுல் 43 பந்துகளில் 62 ரன்களுடனும், குர்னால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
-
1st ODI. It's all over! India won by 66 runs https://t.co/MiuL1livUt #INDvENG @Paytm
— BCCI (@BCCI) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1st ODI. It's all over! India won by 66 runs https://t.co/MiuL1livUt #INDvENG @Paytm
— BCCI (@BCCI) March 23, 20211st ODI. It's all over! India won by 66 runs https://t.co/MiuL1livUt #INDvENG @Paytm
— BCCI (@BCCI) March 23, 2021
இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்கள் , ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய வீரர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
14 ஒவர்களில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த விக்கெட்கள் சரிவடையத் தொடங்கியது. சர்துல் தாகூர் 3 விக்கெட்களையும், பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர். இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்லர் - கோலி மோதல் இயல்பான ஒன்றே - இயான் மோர்கன்!