இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்.
அது என்னவென்றால், 500 டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்பதே அந்த சாதனையாகும். அவருக்கு அடுத்த இடங்களில் டுவைன் பிராவோ (453 போட்டிகள்), கிறிஸ் கெயில் (403 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர். இத்தகைய சாதனையைப் படைத்த பொல்லார்டை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு 500 என்ற எண் பதிக்கப்பட்டிருந்த ஜெர்சியும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழங்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சிம்மன்ஸ் 67*, பிராண்டன் கிங் 33, ரஸ்ஸல் உள்ளிட்டோரின் அதிரடியால் ரன்களை குவித்தது. பொல்லார்டும் தன் பங்கிற்கு 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உள்ளிட்ட 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
-
Kieron Pollard is celebrating his 500th T20 in style! 🎉
— ICC (@ICC) March 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
His 15-ball 34 has taken him to 10000 T20 runs 🔥 #SLvWI pic.twitter.com/SUt23Zy7a1
">Kieron Pollard is celebrating his 500th T20 in style! 🎉
— ICC (@ICC) March 4, 2020
His 15-ball 34 has taken him to 10000 T20 runs 🔥 #SLvWI pic.twitter.com/SUt23Zy7a1Kieron Pollard is celebrating his 500th T20 in style! 🎉
— ICC (@ICC) March 4, 2020
His 15-ball 34 has taken him to 10000 T20 runs 🔥 #SLvWI pic.twitter.com/SUt23Zy7a1
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்களை எடுத்தது.