பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. 2009இல் இவ்விரு அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தற்போது தான் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 68.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது நாட்டில் டெஸ்ட் போட்டி நடைபெறுவது குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
-
I welcome Test Cricket back to Pakistan. Specially, to my city Rawalpindi.
— Shoaib Akhtar (@shoaib100mph) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
When your players play at home, they become heroes, this is what inspires a young generation to take up a sport and idolize greatness.#PAKvSL #Rawalpindi
">I welcome Test Cricket back to Pakistan. Specially, to my city Rawalpindi.
— Shoaib Akhtar (@shoaib100mph) December 11, 2019
When your players play at home, they become heroes, this is what inspires a young generation to take up a sport and idolize greatness.#PAKvSL #RawalpindiI welcome Test Cricket back to Pakistan. Specially, to my city Rawalpindi.
— Shoaib Akhtar (@shoaib100mph) December 11, 2019
When your players play at home, they become heroes, this is what inspires a young generation to take up a sport and idolize greatness.#PAKvSL #Rawalpindi
அதில், "டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் பாகிஸ்தானுக்கு வரவேற்கிறேன். குறிப்பாக, எனது நகரமான ராவல்பிண்டிக்கு. வீரர்கள் சொந்த நாட்டில் விளையாடும்போது, அவர்கள் ஹீரோக்களாக மாறுகிறார்கள். இதுதான் அடுத்த இளம் தலைமுறையினர்களை விளையாட ஊக்கம் அளிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ரஷித் கானுக்கு டாடா காட்டிய ஆப்கானிஸ்தான்..!