பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உள்ளூரு டி20 தொடரான நேஷனல் டி20 கோப்பை தொடரில் சூதாட்ட சர்ச்சை எழுந்துள்ளது. இத்தொடரில் பங்கேற்ற வீரர் ஒருவரை சூதாட்டத்தில் ஈடுபடுத்த அடையாளம் தெரியாத நபர் அணுகியாதாக தகவல் வெளியானது.
இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தற்போது உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேஷனல் டி20 கோப்பை தொடரின் போது வீரர் ஒருவரை சூதாட்டத்தில் ஈடுபடுத்த அடையாளம் தெரியாத நபர் அணுகியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த வீரர் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
வீரரின் புகாரைத் தொடர்ந்து, அனுகிய நபர் யார், வீரர்கள் குறித்த தகவல்கள் எவ்வாறு வெளியானது போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதில் புகாரளித்த வீரர் குறித்தோ, அல்லது விசாரணை குறித்தோ எங்களால் எந்தவொரு தகவலையும் தற்போது பகிர்ந்துகொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது உமர் அக்மலை, சூதாட்டத்தில் ஈடுபடுத்த அடையாளம் தெரியாத நபர் அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அது நிரூபிக்கப்பட்டு, உமர் அக்கமலுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரொனால்டோவை அழைத்து வந்த ஜுவென்டஸ் அணி!