ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட் - இஷாந்த் வேகத்தில் சுக்குநூறான வங்கதேசம் - Ind vs Ban day night test

கொல்கத்தா: இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கசதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

test
author img

By

Published : Nov 22, 2019, 5:16 PM IST

Updated : Nov 22, 2019, 5:31 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்க, இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இரு அணிகளும் முதன்முறையாக இப்போட்டியின் மூலம் பகலிரவு டெஸ்ட்டில் களமிறங்கின.

வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி என்பதால் இப்போட்டியைக் காண வங்கதேச பிரதமர் வந்திருந்தார். அதுமட்டுமல்லாது இப்போட்டியைக் காண மைதானம் முழுவதிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் வந்திருந்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணியின் இம்ருல் கேயஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்த கேப்டன் மொமினுள் ஹாக், மொகம்மது மிதுன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் ரன் ஏதுமின்றி வரிசையைக நடையைக் கட்டினர்.

test
ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்த வங்கதேச வீரர்

எனினும் மறுமுனையில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்கவீரர் ஷத்மன் இஸ்லாம் 29 ரன்னில், உமேஷ் பந்தில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் சஹா விக்கெட் கீப்பிங்கில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஆறாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

வங்கதேச அணி உணவு இடைவேளைக்கு முன்பே ஆறு விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ், நயீம் ஹாசன் ஆகியோர் சற்று அதிரடி கலந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது சமி வீசிய பந்து லிட்டன் தாஸின் ஹெல்மட்டை தாக்கியதால் அவர் 24 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதிலாக எபாதாத் ஹூசைன் களமிறங்கினார். இறுதிக்கட்டத்தில் நயீம் ஹாசன் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாத வங்கதேச அணி 106 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. வங்கதேச அணியில் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

test
விக்கெட் வீழ்த்திய இந்திய வேகங்கள் இஷாந்த், உமேஷ்

இந்திய பந்துவீச்சில் அதிகபட்சமாக இஷாந்த் 12 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு மெய்டன் உள்ளிட்ட ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் மூன்று, ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Intro:Body:

Pink test - Ind bowls out bangladesh for 106

Conclusion:
Last Updated : Nov 22, 2019, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.