ETV Bharat / sports

'நான் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க மாட்டேன் என நினைத்தார்கள்; ஆனால்...?' - யுவராஜ் சிங்குடன் பும்ரா

தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் ரசிகர்கள், தன்னை 'இவர் நீண்ட நாள் விளையாடமாட்டார்' என விமர்சித்ததாக இந்திய பந்துவீச்சாளர் பும்ரா, சக வீரர் யுவராஜ் சிங்கிடம் இன்ஸ்டாகிராம் நேரலையில் கூறினார்.

People told me that I won't play for long: Jasprit Bumrah

author img

By

Published : Apr 27, 2020, 2:30 PM IST

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில், தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.

கரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பும்ரா சக வீரர் யுவராஜ் சிங்குடன் நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் தனது கிரிக்கெட் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது யுவராஜ் சிங், பும்ராவின் முறை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பும்ரா, "ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகர்கள் எனது வித்தியாசமான பந்துவீச்சைக் கண்டு நான் நீண்ட நாள்கள் இந்திய அணிக்குள் தாக்குப்பிடிக்க மாட்டேன் என நினைத்தனர். குறிப்பாக நான் ரஞ்சி டிராபி தொடரில் மட்டுமே விளையாடுவேன் என அவர்கள் விமர்சித்துவந்தனர். ஆனால் அவர்களுக்கு நான் எனது ஆட்டத்திறன் மூலமே பதிலளித்தேன்" என விளக்கினார்.

இதையடுத்து யுவராஜ் சிங் பும்ராவிடம், மூன்று ஆண்டுகளுக்கு முன் உங்களது ஆட்டத்திறனைப் பார்த்து நீங்கள் உலகின் முதல்நிலை பந்துவீச்சாளராகத் திகழ்வீர்கள் எனக் கணித்தேன் எனக் கூறினார்.

2015இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது இடத்திலும் உள்ளார். 26 வயதான இவர் இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் 68 விக்கெட்டுகளும், 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் இறுதியாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எது நிஜம், எது நிழல் எனத் தெரியவில்லை’... இளம் வீரர்களை சாடிய யுவராஜ் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.