பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அகமது கடந்த 2016ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் அவரே தேர்வானார். அணியின் கேப்டனாக இருந்தாலும் இந்தாண்டு நடைபெற்ற உலக்கோப்பைத் தொடரில் சர்ஃப்ராஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுமட்டுமில்லாமல் ஒரு கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு சர்ஃப்ராஸால் கோப்பையை வென்றும் தரமுடியவில்லை.
மேலும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியதற்கு சர்ஃப்ராஸின் மோசமான கேப்டன்சியும் காரணம் என்று கூறப்பட்டது. இவையனைத்தையும் வைத்து சர்ஃப்ராஸை முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். அப்போதிருந்தே சர்ஃப்ராஸை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அதற்கு வலுசேர்க்கும் விதமாக இலங்கை அணியுடனான டி20 போட்டிகளில் பாகிஸ்தான் ஒய்ட் வாஷ் ஆகியது. இதுதான் சமயம் என்று தொடர் நடந்து முடிந்த ஒரு வாரத்திற்குள் சர்ஃப்ராஸின் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டுள்ளது.
சர்ஃப்ராஸ் கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய கொஞ்ச நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியின்போது ஜாலியாக டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டது.
-
Here is @TheRealPCB tweet moments after Sarfaraz was sacked. Classy. (Background score courtesy my one-year old) pic.twitter.com/QuCqxQTDXJ
— Osman Samiuddin (@OsmanSamiuddin) October 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is @TheRealPCB tweet moments after Sarfaraz was sacked. Classy. (Background score courtesy my one-year old) pic.twitter.com/QuCqxQTDXJ
— Osman Samiuddin (@OsmanSamiuddin) October 18, 2019Here is @TheRealPCB tweet moments after Sarfaraz was sacked. Classy. (Background score courtesy my one-year old) pic.twitter.com/QuCqxQTDXJ
— Osman Samiuddin (@OsmanSamiuddin) October 18, 2019
இந்தப் பதிவை ஸ்க்ரீன்சாட் எடுத்த ஓஸ்மான் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ஃப்ராஸ் அகமதுவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதைக் கொண்டாடும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் செம வைரலாகியதால் ரசிகர்கள் கோபத்துக்குள்ளாகினர். இதனையறிந்த வாரியம் உடனே சர்ச்சைக்குரிய ட்வீட்டை அழித்துவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டது.
மீண்டும் வாரியம் வெளியிட்ட ட்வீட்டில், “இந்த வீடியோ 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டிக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது என்பதை நினைவூட்ட முன்கூட்டியே திட்டமிட்டு(scheduled video) பதியப்பட்டதாகும். சர்ஃப்ராஸ் அகமதுவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நேரத்தில், இந்த ட்வீட் வெளியாகியதால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான நேரத்தில் வீடியோ வெளியாகியதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.