இந்திய கிரிக்கெட் வீரர் பார்தீவ் பட்டேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (டிசம்பர் 9) அறிவித்துள்ளார். 35 வயதான அவர், கடைசியாக 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். இதுவரை, இந்தியாவுக்காக 25 டெஸ்ட் போட்டி, 38 ஒருநாள் போட்டி, இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, குஜராத்துக்காக 194 முதல் தரப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் 17 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி சாதனைப் படைத்தவர்
- — parthiv patel (@parthiv9) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— parthiv patel (@parthiv9) December 9, 2020
">— parthiv patel (@parthiv9) December 9, 2020
டெஸ்ட் போட்டியைத் தவிர, பார்தீவ் டி20 கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக வலம்வந்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் விளையாடிய ஒவ்வொரு அணியிலும் ரன்களைக் குவித்தார். ஐபிஎல் 2020இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் ஓய்வு முடிவு, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.