பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவந்த தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தன.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று (பிப். 14) லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.
-
Pakistan have done it 🔥
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hasan Ali slams a six to wrap up a 2-1 series win with eight balls remaining 🙌#PAKvSA | https://t.co/yCpa5Fvdbm pic.twitter.com/Vt3nSKMd5A
">Pakistan have done it 🔥
— ICC (@ICC) February 14, 2021
Hasan Ali slams a six to wrap up a 2-1 series win with eight balls remaining 🙌#PAKvSA | https://t.co/yCpa5Fvdbm pic.twitter.com/Vt3nSKMd5APakistan have done it 🔥
— ICC (@ICC) February 14, 2021
Hasan Ali slams a six to wrap up a 2-1 series win with eight balls remaining 🙌#PAKvSA | https://t.co/yCpa5Fvdbm pic.twitter.com/Vt3nSKMd5A
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தை தந்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
இறுதியில் ஹசன் அலி சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் 18.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
Half-century for David Miller 👏
— ICC (@ICC) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
This has been a fighting knock from the Proteas batsman, and it's helped take South Africa past 130. #PAKvSA pic.twitter.com/EX6nmLhU1Z
">Half-century for David Miller 👏
— ICC (@ICC) February 14, 2021
This has been a fighting knock from the Proteas batsman, and it's helped take South Africa past 130. #PAKvSA pic.twitter.com/EX6nmLhU1ZHalf-century for David Miller 👏
— ICC (@ICC) February 14, 2021
This has been a fighting knock from the Proteas batsman, and it's helped take South Africa past 130. #PAKvSA pic.twitter.com/EX6nmLhU1Z
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நவாஸ் ஆட்டநாயகனாகவும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: அஸ்வின் அபாரம்; 134 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து - மீண்டும் மிரட்டும் ரோஹித்!