தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்றுவந்த உள்ளூர் டி20 தொடரான மசான்ஸி சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டூ பிளேசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி, கிளாசன் தலைமையிலான ஷ்வானே ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பார்ல் ராக்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணியில் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார்.
இதன்மூலம் ஸ்பார்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 51 ரன்களை சேர்த்தார். ராக்ஸ் அணி சார்பில் இசுரு உதானா, ஷம்சி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராக்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹென்ரி டேவிட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 44 பந்துகளில் 77 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
🎶Monate so, Monate so...
— Mzansi Super League 🔥 🇿🇦 🏏 (@MSL_T20) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Take the trophy home, we the champions
Champions🎶@Paarl_Rocks 🎉🥳🏆 #MSLT20 pic.twitter.com/SwoL5KPatn
">🎶Monate so, Monate so...
— Mzansi Super League 🔥 🇿🇦 🏏 (@MSL_T20) December 16, 2019
Take the trophy home, we the champions
Champions🎶@Paarl_Rocks 🎉🥳🏆 #MSLT20 pic.twitter.com/SwoL5KPatn🎶Monate so, Monate so...
— Mzansi Super League 🔥 🇿🇦 🏏 (@MSL_T20) December 16, 2019
Take the trophy home, we the champions
Champions🎶@Paarl_Rocks 🎉🥳🏆 #MSLT20 pic.twitter.com/SwoL5KPatn
பார்ல் ராக்ஸ் அணி 14.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஷ்வானே ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹென்ரி டேவிட்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!