ETV Bharat / sports

'அவருக்கு பதிலாக வேறு யாருக்காவது அந்த வாய்ப்பு உதவும்' - அருண் லால்! - ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி

கொல்கத்தா: ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து பெங்கால் அணி வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா தவறான நடத்தை காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதினால் அந்த வாய்ப்பு வேறு யாருக்காவது உதவுமென அந்த அணியின் பயிற்சியாளர் அருண் லால் தெரிவித்துள்ளார்.

Opportunity to find another Dinda
Opportunity to find another Dinda
author img

By

Published : Dec 26, 2019, 9:43 AM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் சுற்று போட்டி தொடங்குவதற்கு முதல் நாள், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா பயிற்சியின்போது சக அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரனதேப் போஸை தவறாக விமர்சனம் செய்ததால் ரஞ்சி கோப்பையின் பெங்கால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் சமீப காலமாக அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை பிரச்னைகள் இருந்ததினால், பெங்கால் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அருண் லால் கூறுகையில், "இது ஒன்றும் தவறான விஷயமல்ல. இதன் மூலம் பெங்கால் அணி அடுத்த டிண்டாவை தேடுவதற்கான வாய்ப்பாகவே இது இருக்கும். ஏனெனில் ஒரு சில வீரர்கள் திடீரென தோன்றி ஐந்து விக்கெட்டுகளை எடுக்கும் சூழ்நிலைகள் கூட உருவாகலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "இளைஞர்கள் எப்போதும் தங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அணியிலிருந்து இடம் காலியாகும்போது உங்களால் அதனை நிரப்ப வாய்ப்பு கிடைக்கும்" என இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்கா:குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஆஸி. வீரர்கள்

Intro:Body:

Opportunity to find another Dinda: Lal on senior pacer's suspension

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.