ETV Bharat / sports

மீண்டும் டையில் முடிந்த இங்கிலாந்து - நியூசிலாந்து இறுதிப்போட்டி; மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்... உலகக்கோப்பை தேஜாவூ! - இங்கிலாந்து - நியூசிலாந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி சூப்பர் ஓவர்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. அதேபோல, இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 தொடரின் கடைசி போட்டியிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலைத்தான் மீண்டும் உருவானது. அந்தப் போட்டியைப் (உலகக்கோப்பை ஃபைனல்) போலத்தான் இருந்தது இந்தப் போட்டியின் முடிவும். மீண்டும் ஒரு டை, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்...

new zealand
author img

By

Published : Nov 10, 2019, 2:06 PM IST

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கும் சில விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதனால்தான் என்னவோ ஒருநாள் போட்டிகளில் முன்பு இருக்கும் சுவாரஸ்யம் இப்போது குறைந்துக்கொண்டேப் போகிறது. ஆனால், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி என்றால் இதற்கு விதிவிளக்கு இல்லை என்பதை இவ்விரு அணிகள் மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

england vs new zealand
இங்கிலாந்து - நியூசிலாந்து உலகக்கோப்பை ஃபைனல்

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (ஆஷஸ்) போன்ற அணிகள் மோதும் வரிசையில் தற்போது இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட இவர்கள் மோதும் போட்டி இ.சி.ஜி மிஷினில் வரும் கோடுகளைப் போல, ஆட்டத்தில் எதிர்பார்ப்பு, பதற்றம், சுவாரஸ்யம், இவையெல்லாம் ஏறியும் இறங்கியும் செல்லும். இது போட்டியின் முடிவுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. அதேபோல, இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 தொடரின் கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலைத்தான் மீண்டும் உருவானது. அந்தப் போட்டியைப் (உலகக்கோப்பை ஃபைனல்) போலத்தான் இருந்தது இந்தப் போட்டியின் முடிவும். மீண்டும் ஒரு டை, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்...

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தது. இதனால், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.

england vs new zealand
முன்ரோ - கப்தில் இணை

இப்போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில், கோலின் முன்ரோ, டிம் சைஃபெர்ட் ஆகியோர் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டனர். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கப்தில் 50, கோலின் முன்ரோ 46 ரன்கள் விளாசினர்.

இதைத்தொடர்ந்து, 11 ஓவர்களில் 147 ரன்கள் என்ற இமால இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மூன்று ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களை எடுத்து தடுமாறியது. அப்போது (உலகக்கோப்பை ஃபைனல்) இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் - பட்லர் ஜோடி காப்பாற்றியது போல இம்முறை பெயர்ஸ்டோவ் - சாம் கரண் இணை காப்பாற்றியது.

england vs new zealand
48 ரன்கள் விளாசிய பெய்ர்ஸ்டோவ்

ஓவருக்கு இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என இந்த ஜோடி 4.1 ஓவரிலேயே 61 ரன்கள் சேர்த்த நிலையில், பெய்ர்ஸ்டோவ் 48, சாம் கரண் 24, ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லிவிஸ் கிரேகோரி, டாம் கரன் ஆகியோர் கேமியோ இன்னிங்ஸுகளை விளையாடி அவுட்டானபின், இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் 13 ரன்கள் தேவை. இந்தச் சமயத்தில் களமிறங்கிய கிறிஸ் ஜோர்டன், ஜிம்மி நீஷம் வீசிய நான்காவது பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்சருக்கு அடிக்க, அடுத்தப் பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார்.

இதனால், கடைசி பந்தில் இங்கிலாந்து அணிக்கு ஐந்து ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தை நீஷம் லோ ஃபுல்டாஸாக வீச, அதை ஜோர்டன் ஃபைன் லெக் திசையில் பவுண்டரி அடித்ததால், போட்டி டையில் முடிந்தது. இப்போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு உலகக்கோப்பையின் தேஜாவு போலத்தான் இருந்தது.

england vs new zealand
இங்கிலாந்து அணியினர்

இம்முறையும் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. கடந்த சூப்பர் ஓவரை விட இம்முறை அந்த அணி ஒரு ரன்னை கூடுதலாக எடுத்தது. ஒருவேளை இம்முறை சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால்... பவுண்டரி கவுண்ட் விதிமுறைக்கு பதில் போட்டியில் முடிவு தெரியும்வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெறும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது.

england vs new zealand
டி20 தொடரை போராடி வென்ற இங்கிலாந்து அணி

ஆனால், சூப்பர் ஓவரில் 18 ரன்கள் டார்கெட் உடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. பவுண்டரி கவுண்ட் விதிமுறை இல்லாமல் இம்முறையாவது இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் டிஃபெண்ட் செய்து வெற்றிபெற்றதே என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:உலகக்கோப்பை, விம்பிள்டன்; ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்ஸ்!

Intro:Body:

england vs new zealand final match

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.