ETV Bharat / sports

’பாக்ஸிங் டே’ டெஸ்ட் : சதம் விளாசிய வில்லியம்சன் ; ஆரம்பத்திலேயே தடுமாறும் பாகிஸ்தான்

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களைக் குவித்துள்ளது.

author img

By

Published : Dec 27, 2020, 2:11 PM IST

NZ vs Pak, 1st Test: Williamson's knock gives hosts edge on day two

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிச.26) மவுண்ட் மாங்குனியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை எடுத்தது. தொடர்ந்து இன்று (டிச.27) இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்-நிக்கோலஸ் இணை, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 22ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரி நிக்கோலஸும் அரைசதம் கடந்தார்.

பின்னர் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன்னும் 129 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இதனால் 155 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும், யாஸிர் ஷா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் - அபித் அலி இணை தொடக்கம் தந்தது. இதில் அபித் அலி 10 ரன்களில் ஜெமிசனிடன் விக்கெட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 30 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அபித் 10 ரன்களுடனும், முகமது அபாஸ் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதனால் 401 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.

இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: கிரீஸ் கோட்டை கடக்காமல் இருந்தும் பெயினுக்கு ரன் அவுட் தராதது ஆச்சரியமே - ஷேன் வார்னே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.