ETV Bharat / sports

தாதாவின் சாதனையை முறியடித்த கோலி! - ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தோனி அடித்த ரன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்மூலம், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

NZ vs IND, 1st ODI: Skipper Kohli surpasses Ganguly in elite India list

author img

By

Published : Feb 5, 2020, 6:36 PM IST

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது.

இதில், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் அசத்தலான சதத்தால் 49ஆவது ஓவரில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 63 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உட்பட 51 ரன்களில் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 58ஆவது அரைசதம் இதுவாகும்.

Skipper Kohli surpasses Ganguly in elite India list
கோலி!

இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்களை அடித்த கங்குலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். கேப்டனாக கங்குலி 148 ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 30 அரைசதம் உட்பட 5082 ரன்களை அடித்த நிலையில், கோலி தனது 87ஆவது இன்னிங்ஸில் 21 சதம், 23 அரை சதம் உட்பட 5,123 ரன்களைக் குவித்துள்ளார்.

NZ vs IND, 1st ODI: Skipper Kohli surpasses Ganguly in elite India list
கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன்களின் வரிசையில் தோனி 200 போட்டிகளில் பங்கேற்று 6641 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது அசாருதீன் 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5239 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கங்குலியின் சாதனையை முறியடித்ததன்மூலம், கோலி தற்போது இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த கேப்டன்களின் வரிசையில் கோலி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த கேப்டன்கள் விவரம்:

  1. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 230 போட்டிகள், 8497 ரன்கள்
  2. தோனி (இந்தியா) - 200 போட்டிகள், 6641 ரன்கள்
  3. ஸ்டீபன் பிளெமிங் (நியூசிலாந்து) - 218 போட்டிகள், 6295 ரன்கள்
  4. அர்ஜூனா ரணதுங்கா (இலங்கை) - 193 போட்டிகள், 5608 ரன்கள்
  5. கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 149 போட்டிகள், 5414 ரன்கள்
  6. முகமது அசாருதீன் (இந்தியா) - 175 போட்டிகள், 5239 ரன்கள்
  7. கோலி (இந்தியா) - 87 போட்டிகள், 5123 ரன்கள்

இதையும் படிங்க: ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்து சாதனை படைத்த சர்ஃபராஸ் கான்!

Intro:Body:

cc

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.