உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் இப்பெருந்தொற்றால் இதுவரை 46,433 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1568 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தொற்று குறித்து சரியான புரிதல் இல்லாததால் சமூக வலைதளங்களில் பரவிவரும் போலி செய்திகள், தவறான கருத்துகளைக் கண்டு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வலம் வரும் போலி செய்திகளுக்கு எதிராக டிக்டாக் செயலி விழப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, பாலிவுட் பிரபலங்களான ஆயஷ்மான் குரானா, சாரா அலி கான், க சனோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கரோனா வைரஸ் குறித்து எந்தவொரு போலியான செய்திகளோ தவறான கருத்துகளையோ பரப்ப வேண்டாம். அவ்வாறு போலியான செய்திகளை பரப்புவது கரோனா வைரஸைக் காட்டிலும் ஆபத்தானது என்று அவர்கள் அந்த வீடியோவில் கேட்டுகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மாரத்தான் ஓடும் பென் ஸ்டோக்ஸ்...!