இந்திய அணியின் கேப்டன் கோலி, கிரிக்கெட்டின் சேஸ் மாஸ்டர் என அழைக்கப்படுகிறார். 2016 டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில், 160 ரன்கள் இலக்குடன் சேஸிங் செய்த இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்த இக்கட்டான நிலையில், கோலி நிலைத்து ஆடினார். இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு ஓவர்களில் 67 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், அவர் தோனியுடன் சேர்ந்து அதிரடி காண்பித்தார். கோலி - தோனி ஜோடி ஒரு ரன்னை இரண்டு ரன்களாகவும், இரண்டு ரன்களை மூன்று ரன்களாவும் மாற்றியது. இதில், கோலி 82 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி அப்போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியை என்னால் நிச்சயம் மறக்க முடியாது. இந்தப் போட்டியில் ஃபிட்னெஸ் தேர்வு(fitness test) நடைபெற்றது போல என்னை தோனி ஓட வைத்தார் ” என கோலி பதிவிட்டார். அவரது இந்தப் பதிவால் தோனி ஓய்வு பெறப் போகிறார் என சர்ச்சையும் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி டி20 போட்டியில் மொகாலியில் விளையாடியது. இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு பதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது, இந்தியா. இப்போட்டியில் டாஸ் வென்ற கோலி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை அவர் நினைவில் வைத்திருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பார் போல.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் வெற்றிக்கு 150 ரன்களை இலக்கு நிர்ணயித்தது. 2016 டி20 உலகக்கோப்பை போட்டியைப் போல் இம்முறையும் ரோகித் ஷர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 3.5 ஓவர்களில் 33 ரன்களை எட்டிய நிலையில், கேப்டன் கோலி களமிறங்கினார்.
கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய ஷிகர் தவான், இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் உலகக்கோப்பையில் விளையாடிய ஆட்டத்தை நினைவுப் படுத்தியது. மறுமுனையில், கோலி சென்றமுறை ஆஸி.க்கு எதிராக மொகாலியில் விளையாடிய அதே உத்வேகத்துடன் பேட்டிங் செய்தார்.
கோலி - தவான் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது. இந்த நிலையில், இந்திய அணி 11.4 ஓவர்களில் 94 ரன்களை எட்டிய நிலையில், ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட் ஆனார். ஷாம்சியின் பந்துவீச்சில், லாங் ஆன் திசையில் அவர் அடித்த பந்தை டேவிட் மில்லர் டைவ் அடித்து பிடித்தார்.
இதையடுத்து, நான்காவது வரிசையில் களமிறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்திலியே நான்கு ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும், கோலி தனது சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்துவதில் தவறவில்லை. பெலுக்வாயோ வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, சர்வதேச டி20யில் 22ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். பின், ரபாடா மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்தை பேக்வர்ட் ஸ்கோயர் லெக் திசையில் கோலி சிக்சருக்கு பறக்கவிட்டார். இதன்மூலம், கோலி v ரபாடா பலப்பரீட்சையில் கோலி வென்றார்.
அதன்பின், ஃபார்டியூன் வீசிய 19ஆவது ஓவரில் கோலி மீண்டும் சிக்சர் அடிக்க அவரது ஸ்கோர் 71 ஆனது. இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் வரிசையில் கோலி 2440 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்தார். அதேபோல், இம்முறை தோனிக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்தார். இதனால், இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்களை எட்டி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
1-0 🇮🇳🇮🇳 #TeamIndia wrap the 2nd T20I by 7 wickets #INDvSA @paytm pic.twitter.com/GW0FBddf3k
— BCCI (@BCCI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1-0 🇮🇳🇮🇳 #TeamIndia wrap the 2nd T20I by 7 wickets #INDvSA @paytm pic.twitter.com/GW0FBddf3k
— BCCI (@BCCI) September 18, 20191-0 🇮🇳🇮🇳 #TeamIndia wrap the 2nd T20I by 7 wickets #INDvSA @paytm pic.twitter.com/GW0FBddf3k
— BCCI (@BCCI) September 18, 2019
விராட் கோலி 52 பந்துகளில் நான்கு பவுண்ட்ரி, மூன்று சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார். இதன்மூலம், மொகாலியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதையும் படிங்க:
உலக கிரிக்கெட் வரலாற்றில் யுவி நிகழ்த்திய மேஜிக்; நாஸ்டால்ஜிக் மெம்மரிஸ் ரீவைண்ட்..! #OnThisDay ❤