ETV Bharat / sports

ENGvNZ Live Updates: சரித்திரம் படைத்தது இங்கிலாந்து!

உலகக்கோப்பை ஃபைனல்
author img

By

Published : Jul 14, 2019, 4:54 PM IST

Updated : Jul 15, 2019, 12:00 PM IST

16:12 July 14

லண்டன்: பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

ENGvNZ
பட்லர்

சூப்பர் ஓவரும் டை:

நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 14 ரன்கள் எடுத்தது. இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஸ்ட்ரைக்கில் இருந்த கப்தில் இரண்டாவது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆனார். இதையடுத்து, இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை முதல்முறை வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

போல்ட் ஓவரில் மாஸ் காட்டிய பட்லர் - ஸ்டோக்ஸ்

மூன்றாவது பந்தில் பவுண்டரியை அடித்தார். இதைத்தொடர்ந்து, கடைசி பந்தில் பட்லரும் பந்தை பவுண்ட்ரிக்கு அனுப்பியதால் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்துள்ளது. 

சூப்பர் ஓவர்:

ஆட்டம் டையில் முடிந்ததால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.

2 பந்தில் 2 ரன் 2 விக்கெட்:

கடைசி இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இரண்டாவது ரன் ஓடும்போது அடில் ரஷித் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட நிலையில், மார்க் வுட் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

சிறந்த ஃபைனல் போட்டி:

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், போல்ட்டின் கடைசி ஓவரின் இரண்டு பந்துகளிலும் ரன் இல்லை. ஏனினும் மூன்றாவது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து, அதற்கு அடுத்த பந்தில் லக் இங்கிலாந்து அணிக்கு அடித்துள்ளது. இரண்டு ரன்கள் எடுத்தபோது, ஓவர் த்ரோவில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்ட்ரிக்கு சென்றது.

ரன்... விக்கெட்... டென்ஷன்

கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், நீஷம் வீசிய 49ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் பிளங்கட் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஸ்டோக்ஸ் மிக அசால்ட்டாக சிக்சர் அடித்தார்.

47 ஓவர் - இங்கிலாந்து 208-6 ஸ்டோக்ஸ் 57, பிளங்கட் 4

மீண்டும் அசால்ட் செய்த ஃபெர்குசன்

ஃபெர்குசன் வீசிய 47ஆவது ஓவரின் முதல் பந்தில் வோக்ஸ் லேதமிடம் ஹை கேட்ச் தந்து நடையைக் கட்டியுள்ளார். இதனால், இறுதிப் போட்டியில் ட்விஸ்டா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நகத்தை கடித்துக் கொண்டு பார்க்கின்றனர். 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஓவர் 45 - இங்கிலாந்து 196 -5 ஸ்டோக்ஸ் 51, கோவ்ஸ் 0

பட்லர் அவுட்; நியூசிலாந்துக்கு ஹோப்

ஃபெர்குசன் வீசிய 45ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில்  செட் பேட்ஸ்மேனாக இருந்த பட்லர் சவுதியிடம் கேட்ச் கொடுத்த 59 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

அரைசதங்கள் விளாசிய பட்லர், ஸ்டோக்ஸ்

இப்போட்டியில், எந்தவித ரிஸ்க் ஷாட்டுகளும் ஆடாமல் சிறப்பாக ஆடிய பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் அரைசதம் விளாசி அணிக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.

40 ஓவர் - இங்கிலாந்து 170-4 ஸ்டோக்ஸ் 43, பட்லர் 42

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 72 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. நம்பிக்கையுடன் ஆடி வரும் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே நியூசிலாந்து அணி வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

35 ஓவர் - இங்கிலாந்து 141-4 , பட்லர் 25, ஸ்டோக்ஸ் 31

35ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்து சேஃப் ஸோனில் ஆடி வருகிறது. இதனால், இங்கிலாந்து அணி 90 பந்துகளில் 101 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு வீரர்களும் களத்தில் செட் ஆகியுள்ளதால், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 ப்ளஸ் பார்ட்னர்ஷிப்

மோர்கன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் ஜாஸ் பட்லர். இந்த ஜோடி 50க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளதால், ஆட்டம் சற்று இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியுள்ளது.  

பவுலிங்கில் மட்டுமல்ல ஃபெர்குசன் ஃபீல்டிங்கிலும் கில்லி!

பவுலிங் மாற்றம், நியூசிலாந்து அணிக்கு க்ளிக் ஆகியுள்ளது. 24ஆவது ஓவரை வீசுவதற்கு, நீஷம் வந்தார். அவர் வீசிய பந்தை பாயின்ட் திசையை நோக்கி கட் - ஷாட்டாக அடித்தார் மோர்கன். ஆனால், அப்பகுதியில் ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்த ஃபெர்குசன் மிக அசால்டாக டைவ் அடித்து மிரட்டலான கேட்ச் பிடித்து மோர்கனை வெளியேற்றினார்.

23 ஓவர் - இங்கிலாந்து 86-3. பென் ஸ்டோக்ஸ் 5, மோர்கன் 9

பெய்ர்ஸ்டோவும் அவுட்!

நியூசிலாந்து அணியின் லக்கி பவுலரான பெர்குசன் இறுதிப் போட்டியில், சிறப்பாக பந்துவீசுகிறார். 20ஆவது ஓவரின்போது, இவரது பந்துவீச்சில், பெய்ர்ஸ்டோவ் 36 ரன்களுடன் இன்செட் எட்ஜ் மூலம் போல்ட்டானார். 

ஜோ ரூட் அவுட்
பெயர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டாலும், அபாயகரமான பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் கிராண்ட்ஹோம்.  17ஆவது ஓவரின்போது அவர் வீசிய அவுட் ஸ்விங் பந்தை கவர் டிரைவ் ஷாட் ஆட முயற்சித்த ரூட், லேதமிடம் கேட்ச் கொடுத்து ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

16 ஓவர் - இங்கிலாந்து 59-1. பெய்ர்ஸ்டோவ் 32, ரூட் 7

சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்துள்ளது. 

ஹாட்ரிக் மெய்டன்; அசத்திய கிராண்ட்ஹோம் - ஹென்ரி

மாட் ஹென்றியின் 10ஆவது ஓவர், கிராண்ட்ஹோமின் 11ஆவது ஓவரைத் தொடர்ந்து, ஹென்றி வீசிய 12ஆவது ஓவரிலும் இங்கிலாந்து அணி ஒரு ரன் எடுக்கவும் தடுமாறியுள்ளது. இதனால், நியூசிலாந்து அணி ஹாட்ரிக் மெய்டன் ஓவர்களை வீசியுள்ளது.

கேட்ச் மிஸ் செய்த கிராண்ட்ஹோம் 

கிராண்ட்ஹோம் வீசிய 11ஆவது ஓவரின் இறுதிப் பந்தில், பெய்ர்ஸ்டோவ் ரிடன் கேட்ச் தந்தார். ஆனால், தனக்கு வந்த அரிய வாய்ப்பை அவர், தவறவிட்டார். 

7 ஓவர் - இங்கிலாந்து 33-1. பெய்ர்ஸ்டோவ் 14, ரூட் 0

ஜேசன் ராயை பெவிலியனுக்கு அனுப்பிய ஹென்றி

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரரான ஜேசன் ராய், போல்ட், மாட் ஹென்றி ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினார். குறிப்பாக, ஹென்றியின் பந்துவீச்சில் அவர் பலமுறை அவுட்சைட் எட்ஜ் ஆகாமல் இருந்து வந்தார். ஆனால், இந்தமுறை அவுட்சைட் எட்ஜ் மிஸ் ஆகவில்லை. ஆறாவது ஓவரின்போது, ஹென்றியின் பந்துவீச்சில் ஜேசன் ராய் லேதமிடம் கேட்ச் தந்து 17 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

பேக் டூ பேக் பவுண்டரி

போல்ட்டின் முதலிரண்டு ஓவர்களில் தடுமாறிய இங்கிலாந்து, அவர் வீசிய மூன்றாவது ஓவரை பெயர்ஸ்டோவ் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

தொடர்ந்து தடுமாறும் ஜேசன் ராய்

3ஆவது ஓவரில், மீண்டும் போல்ட் வீசிய யார்க்கர் பந்து, ஜேசன் ராயின் காலுக்கு நடுவில் சென்றது. ஆனால், ஸ்டெம்பை பதம் பார்க்காமல் சென்றதால், மீண்டும் லக் ஜேசன் ராயிற்கு சென்றது. 

முதல் பந்துலேயே மரண பயம் காட்டிய போல்ட் 

242 ரன்கள் இலக்குடன் ஆட வந்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக ஜேசன் ராய் களமிறங்கினார். நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்ட் வீசிய முதல் பந்து ஜேசன் ராய் காலில் பட்டது. நடுவர் அவுட் வழங்காததால், நியூசிலாந்து அணி ரிவ்யூ கோரியது. அதில், அம்பயர்ஸ் கால் வந்ததால், ஜேசன் ராய் அவுட் ஆவதில் இருந்து எஸ்கேப் ஆனார்.

50 ஓவர் - நியூசிலாந்து 241-8

கடைசி ஓவரில் மாஸ் காட்டிய ஆர்ச்சர்:

ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெறும் மூன்று ரன்களை மட்டுமே எடுத்தது. குறிப்பாக, நியூசிலாந்து வீரர்  மாட் ஹென்ரி நான்கு ரன்களில் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இப்புக்கு 241 ரன்களை மட்டுமே எடுத்தது.

லேதம் அவுட்:

கோவ்ஸ் வீசிய 49ஆவது ஓவரில் நியூசிலாந்து வீரர் லேதம் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் பிரிவில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், பொறுப்புடன் ஆடிய அவர் இறுதிவரை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 56 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

தடுமாறிய கிராண்ட்ஹோம்

இப்போட்டியில், லேதம் ஒருபக்கம் நன்றாக ஆடினாலும்,மறுமுனையில் களத்தில் இருந்த கிராண்ட்ஹோம் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில் தடுமாறினார். இதனால், 46.5 ஆவது ஓவரின்போது வோக்ஸ் பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

40 ஓவர் - நியூசிலாந்து 179 - 5. லேதம் -24, கிராண்ட்ஹோம் 5

நியூசிலாந்து அணிக்கு எமன் ரூபத்தில் வந்த பிளங்கட்

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான நீஷம் இப்போட்டியில் மூன்று பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில், பிளங்கட் பந்துவீச்சில் ரூட் இடம் கேட்ச் தந்து 19 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

93 பந்துகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு முதல் பவுண்டரி

வில்லியம்சன், நிகோல்ஸ், டெய்லர் ஆகியோர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி பவுண்டரி அடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டது. இதனிடையே 93 பந்துகள், அதாவது 15 ஓவர்களுக்கு பிறகு  35ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை நீஷம் பவுண்டரி அடித்து அணிக்கு நம்பிக்கை தந்துள்ளார்.

34 ஓவர் - நியூசிலாந்து 141-4

லேதம் -11, நீஷம் -0

அதிர்ஷ்டமில்லாத டெய்லர்:

மார்க் வுட் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் நியூசிலாந்து வீரர் டெய்லர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால்,பால் டிராக்கிங்கில் , பந்து ஸ்டம்பை மிஸ் செய்வது தெரியவந்துள்ளது. இருப்பினும், கப்தில் இப்போட்டியில் ரிவ்யூவை வீணடித்ததால், டெய்லர் மீண்டும் ரிவ்யூ பயன்படுத்த முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

2015 ஃபைனல் ரிவைண்ட்

2015 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி போல், நியூசிலாந்து அணி இன்று பேட்டிங் செய்துவருகிறது. கப்தில், வில்லியம்சன், நிகோல்ஸ் ஆகியோரை தொடர்ந்து டெய்லரும் தற்போது ஆட்டமிழந்துள்ளனர். அவர் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,  மார்க் வுட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  

செட் பேட்ஸ்மேன் நிகோல்ஸ் அவுட் 

இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் பேட்டிங் செய்த நிகோல்ஸ் 55 ரன்களில் அவுட் ஆனார்.

பிளங்கட் வீசிய 27ஆவது ஓவரில், அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

25 ஓவர் - நியூசிலாந்து 109 -2. நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்களை எடுத்துள்ளது. நிக்கோல்ஸ் - 49, டெய்லர்- 3

சத்தமே இல்லாமல் சாதனை படைத்த பிளங்கட்

2015 உலகக்கோப்பைக்கு பிறகு, மிடில் ஓவர்களான 11 முதல் 40 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை லியாம் பிளங்கட் படைத்துள்ளார். 

இந்த நான்கு வருடத்தில் அவர் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வில்லியம்சன் அவுட்!

22ஆவது ஓவரின் போது,  பிளங்கட் பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பட்லரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 53 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உட்பட அவர் 30 ரன்கள் எடுத்திருந்தார். 

ஜெயவர்தனேவை ஓரம்கட்டிய வில்லியம்சன்

உலகக்கோப்பையில் அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். அவர் இந்தத் தொடரில் இதுவரை 569 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம், 2007இல், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது.

15 ஓவர் - நியூசிலாந்து  63-1

நிகோல்ஸ் - 27
வில்லியம்சன் -9

10 ஓவர் - நியூசிலாந்து 31-1

முதல் பவர் ப்ளே ஆன 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 31 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

6.2 ஓவர் - நியூசிலாந்து 29 -1 

சொதப்பிய கப்தில்

இந்த தொடரில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்த கப்தில் இறுதிப் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 19 ரன்களுடன் வோக்ஸ் பந்துவீச்சில் நடையைக் கட்டி தனது மோசமான ஃபார்மை தொடர்ந்துள்ளார்.

5 ஓவர் - நியூசிலாந்து 24 -0

கப்தில் 18, நிகோல்ஸ் 4

டாஸ் வென்ற நியூசிலாந்து:

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி விவரம்: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் பிளன்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.

நியூஸ்லாந்து அணி விவரம்: மார்டின் கப்தில், ஹென்றி நிகோலஸ், கேன் வில்லியம்சன்(கே), ராஸ் டெய்லர், டாம் லேதம், காலீன் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீசம், மிச்செல் சாண்ட்னர், டிம் சௌதி, மேட் ஹென்ரி.

முதல் கோப்பை யாருக்கு?

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பைத் தொடரை வென்றதில்லை. இதனால், எந்த அணி கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில், கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சொந்த மண் அட்வான்டேஜ் இங்கிலாந்துக்கு கைகொடுக்குமா அல்லது அண்டர்டாக்ஸ் என்ற டேக் உடன் இருக்கும் நியூசிலாந்து அணி சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Intro:Body:

CWC19: ENG vs NZ

Conclusion:
Last Updated : Jul 15, 2019, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.