ETV Bharat / sports

சி.எஸ்.கே.வைப் போன்று எந்த அணியும் கிடையாது - டுவைன் பிராவோ! - டுவைன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போன்று தான் வேறு எந்தவொரு அணியையும் கண்டதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

No team has CSK's family atmosphere: Bravo

author img

By

Published : Apr 29, 2020, 9:22 AM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் விளையாட்டு வீரர்களும் தங்களை சமூக வலைதளங்களில் பிஸியாக வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, சென்னையைப் போன்று எனக்கு வேறு எந்த அணியின் மீதும் ஈர்ப்பு இருந்தது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய பிராவோ, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த வீரர் இணைந்தாலும் அது அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் அவர்கள் உங்களை ஒரு குடும்ப உறுப்பினரைப் போன்று வரவேற்பார்கள்.

மேலும் நான் உலகின் பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போன்று எந்தவொரு அணியும் என்னை ஈர்த்தது கிடையாது.

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சிஎஸ்கே உடனான நல்ல விஷயம் என்னவென்றால், அது எல்லா வீரர்களையும் தங்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க அனுமதிக்கிறது. மேலும் மற்ற அணியின் வெற்றிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொண்டாடத் தவறியதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உலக நட்சத்திரங்கள் பங்கேற்ற 'விருச்சுவல் மாட்ரிட் ஓபன்'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.