இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டது இந்திய பிரிமீரியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் உள்ளூர் டி20 தொடர். இத்தொடரின் 13ஆவது சீசன் நாளை நடைபெறவிருந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களில் யார் சிறந்தவர் என்ற போட்டி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவரிசையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், தனது ட்விட்டர் பதிவில் இக்கேள்விக்கான பதிலை காணொலியாக வெளியிட்டுள்ளார்.
-
Righty-o, as promised, here's the first video of a new series.
— Brad Hogg (@Brad_Hogg) March 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who are the 3 BEST batsmen in the IPL - in the POWERPLAY overs? Any honourable mentions? Let's find out on this episode of #HoggsVlog.
Watch the full vlog here: https://t.co/IbvXjpV5TQ pic.twitter.com/W0NewVIm3H
">Righty-o, as promised, here's the first video of a new series.
— Brad Hogg (@Brad_Hogg) March 28, 2020
Who are the 3 BEST batsmen in the IPL - in the POWERPLAY overs? Any honourable mentions? Let's find out on this episode of #HoggsVlog.
Watch the full vlog here: https://t.co/IbvXjpV5TQ pic.twitter.com/W0NewVIm3HRighty-o, as promised, here's the first video of a new series.
— Brad Hogg (@Brad_Hogg) March 28, 2020
Who are the 3 BEST batsmen in the IPL - in the POWERPLAY overs? Any honourable mentions? Let's find out on this episode of #HoggsVlog.
Watch the full vlog here: https://t.co/IbvXjpV5TQ pic.twitter.com/W0NewVIm3H
அவரது ட்விட்டர் காணொலியில், ”முதலில் டேவிட் வார்னர் உள்ளார். அவர் ஆஃப்சைட்டில் மிகவும் வலிமையானவர், அவர் ஓடுவதிலும் சிறந்தவர். அதனால் அவர் விளையாடும்போது எப்போது தன்னை பிஸியாக வைத்துக்கொள்வார். இரண்டாமிடத்தில் சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா உள்ளார்.
அவர் பல முக்கியமான சூழ்நிலைகளில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர் கிரீஸில் இருக்கும் போது குறிப்பிட்ட சில பந்துவீச்சாளர்களை மட்டும் டார்கெட் செய்து விளையாடும் திறன் பெற்றவர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இதுவரை 193 போட்டிகளில் விளையாடி 5,368 ரன்களையும், 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் டி20, ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களில் சதமடித்து அசத்திய ஒரே இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘உலகக்கோப்பைத் தொடரில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை’