நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் வாட்லிங், சாண்ட்னர் ஆகியோரின் அதிரடியால் ரன்குவிப்பில் ஈடுபட்டது. இதில் நியூசிலாந்து அணியின் பிஜே வாட்லிங் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தையும், மிட்சல் சாண்ட்னர் தனது முதல் சதத்தையும் பதிவு செய்து அசத்தினர்.
-
🙌 What an innings! 🙌
— ICC (@ICC) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
BJ Watling becomes the first New Zealand wicket-keeper to score a Test double hundred.
Follow #NZvENG live 👇 https://t.co/IdOtHGdA1X pic.twitter.com/FPRlq9cCBp
">🙌 What an innings! 🙌
— ICC (@ICC) November 24, 2019
BJ Watling becomes the first New Zealand wicket-keeper to score a Test double hundred.
Follow #NZvENG live 👇 https://t.co/IdOtHGdA1X pic.twitter.com/FPRlq9cCBp🙌 What an innings! 🙌
— ICC (@ICC) November 24, 2019
BJ Watling becomes the first New Zealand wicket-keeper to score a Test double hundred.
Follow #NZvENG live 👇 https://t.co/IdOtHGdA1X pic.twitter.com/FPRlq9cCBp
இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 615 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வாட்லிங் 205 ரன்களையும், சாண்ட்னர் 126 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளைக் கைபற்றினார்.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, தொடக்க வீரர் பர்ன்ஸ் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இருந்தபோதும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் தனது அபார பந்துவீச்சினால் ரோரி பர்ன்ஸ் 30 ரன்களிலும், டொமினிக் 12 ரன்களிலும், ஜேக் லீச் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
-
What a day for Mitchell Santner!
— ICC (@ICC) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
After scoring his maiden Test ton, he bags the crucial wickets of 🏴 openers and Jack Leach in the final session, reducing the visitors to 55/3 at stumps.
BJ Watling top-scored for 🇳🇿 with 205.#NZvENG SCORECARD 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/5fh7k2r7Fd
">What a day for Mitchell Santner!
— ICC (@ICC) November 24, 2019
After scoring his maiden Test ton, he bags the crucial wickets of 🏴 openers and Jack Leach in the final session, reducing the visitors to 55/3 at stumps.
BJ Watling top-scored for 🇳🇿 with 205.#NZvENG SCORECARD 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/5fh7k2r7FdWhat a day for Mitchell Santner!
— ICC (@ICC) November 24, 2019
After scoring his maiden Test ton, he bags the crucial wickets of 🏴 openers and Jack Leach in the final session, reducing the visitors to 55/3 at stumps.
BJ Watling top-scored for 🇳🇿 with 205.#NZvENG SCORECARD 👇https://t.co/IdOtHFVZap pic.twitter.com/5fh7k2r7Fd
இதன் மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியில் ஜோ டென்லி களத்தில் உள்ளார். நியூசிலாந்து அணி தரப்பில் மிட்சல் சாண்ட்னர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா ஆஸி. உடன் பிங்க் டெஸ்ட் விளையாட வேண்டும் - வார்னே நம்பிக்கை!