நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்திருந்தது.
அதன் பின் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலந்து அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் மூலம் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களைக் குவித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டாம் லேதம் 8 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜீட் ரவலும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30ஆவது அரை சதத்தை கடந்து அசத்தினார்.
அவர் அரை சதமடித்த மகிழ்ச்சியில் இருக்கும்போதே, சாம் கர்ரன் வீசிய அடுத்த பந்திலேயே ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ் தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
-
Stumps at Mount Maunganui and it is advantage England at the end of day two. After posting 353, they reduced the hosts to 144/4. Curran was the pick of the bowlers, dismissing Latham and Williamson.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/vydb5uXcdG
— ICC (@ICC) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stumps at Mount Maunganui and it is advantage England at the end of day two. After posting 353, they reduced the hosts to 144/4. Curran was the pick of the bowlers, dismissing Latham and Williamson.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/vydb5uXcdG
— ICC (@ICC) November 22, 2019Stumps at Mount Maunganui and it is advantage England at the end of day two. After posting 353, they reduced the hosts to 144/4. Curran was the pick of the bowlers, dismissing Latham and Williamson.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/vydb5uXcdG
— ICC (@ICC) November 22, 2019
இதன் மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டும் எடுத்து திணறி வருகிறது. அந்த அணியில் ஹென்ரி நிக்கோலஸ் 26 ரன்களுடனும், வாட்லிங் 6 ரன்களுடனும் களத்திலுள்ளனர். இங்கிலாந்து அணி சார்பில் சாம் கர்ரன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: T10 league: ருத்தரதாண்டவமாடிய பான்டன் - அசத்தல் வெற்றி கலந்தர்ஸ்!