நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 18) ஆக்லாந்தில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக சதாப் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான்:
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சஃபீக், ஹைத்ர் அலி, முகமது ஹபீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய சதாப் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதாப் கான் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சொதப்பிய பாகிஸ்தான்:
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சதாப் கான் 42 ரன்களையும், ஃபஹீம் 31 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் ஜேக்கப் டஃப்பி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
தொடக்கத்தில் தடுமாற்றம்:
அதன் பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த கான்வே, பிலீப்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதிரடியில் மிரட்டிய செஃபெர்ட்:
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செஃபெர்ட் எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடி வந்த மார்க் சாப்மானும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி, அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார்.
சிக்சரில் கிடைத்த வெற்றி:
அதன்பின் 57 ரன்களில் செஃபெர்ட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மார்க் சாப்மானும் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 18.5ஆவது ஓவரில் சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
-
Who else?! Your @ANZ_NZ Player of the Match - Jacob Duffy 👏🏽 #NZvPAK #CricketNation pic.twitter.com/KVZEWkP0pi
— BLACKCAPS (@BLACKCAPS) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Who else?! Your @ANZ_NZ Player of the Match - Jacob Duffy 👏🏽 #NZvPAK #CricketNation pic.twitter.com/KVZEWkP0pi
— BLACKCAPS (@BLACKCAPS) December 18, 2020Who else?! Your @ANZ_NZ Player of the Match - Jacob Duffy 👏🏽 #NZvPAK #CricketNation pic.twitter.com/KVZEWkP0pi
— BLACKCAPS (@BLACKCAPS) December 18, 2020
இதன் மூலம் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டு வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜேக்கப் டஃப்பி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:அபுதாபி டி10 லீக்: அறிமுகமாகும் புனே டெவில்ஸ்!