ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் என்பது இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் தொடங்க இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தற்போதே அது தொடர்பான பேச்சுகள் இணையத்தை கலக்கி வருகின்றன. இம்மாதம் 18ஆம் தேதி கொல்கத்தாவில் ஐபிஎல் வீரர்களின் ஏலம் நடைபெறுவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இங்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்த ட்வீட் ரசிகர்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. அது என்னவென்றால் இஸ்ரோவின் சந்திராயன் 2 திட்டத்தின்மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், தனது பயணத்தின் கடைசி கட்டத்தில் நிலவில் விழுந்தது.
இதனிடையே நிலவில் மேற்பரப்பில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நேற்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் நாசாவை குறிப்பிட்ட விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த குழுவினர், தங்கள் அணியின் வீரர்கள் விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ் ஆகியோர் அடிக்கும் பந்துகளை கண்டுபிடித்துத் தர முடியுமா என பதிவிட்டிருந்தது.
-
Could the #NASA team that found #VikramLander also help us find the cricket balls hit by ABD & Virat 👀?
— Royal Challengers (@RCBTweets) December 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Could the #NASA team that found #VikramLander also help us find the cricket balls hit by ABD & Virat 👀?
— Royal Challengers (@RCBTweets) December 3, 2019Could the #NASA team that found #VikramLander also help us find the cricket balls hit by ABD & Virat 👀?
— Royal Challengers (@RCBTweets) December 3, 2019
இதைக் கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும் ஆர்சிபி அணியை கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். அதில் ஒரு ட்விட்டர்வாசி பெங்களூரு அணி வெற்றி பெற நாசா வேறு ஒரு அண்டத்தை கண்டுபிடிக்க முடியுமா என பதிவிட்டிருந்தார். சிலர் முதலில் நீங்கள் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றுங்கள் என்றும் உங்களுக்கு யாரேனும் ஐபிஎல் கோப்பையை கண்டுபிடிக்க உதவ வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தனர்.
பெங்களூரு அணியில் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற பல அதிரடி வீரர்கள் இருந்தாலும், இதுவரை அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை. ஏற்கனவே, ஈ சாலா கப் நமதே (இந்தமுறை கோப்பை நமக்கே) என்ற டேக் லைனை பயன்படுத்திவரும் ஆர்.சிபி அணியை நெட்டிசன்கள் இன்றளவும் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர். இதுபோதாது என்ற குறைக்கு தற்போது அந்த அணி விக்ரம் லேண்டர் குறித்த ட்வீட்டால் மீண்டும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது.