இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இவரது பயிற்சியின் கீழ் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இவ்விரு அணிகளுக்கு கடைசி போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் கோலி, கே.எல்.ராகுல், அஷ்வின் மற்றும் தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருடன் ஆன்டிகுவா கடற்கரையில் கப்பலில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
-
Hot hot hot. Time for some juice. Coco Bay Sheer Rocks Beautiful. Antigua 🏝 pic.twitter.com/kMLuLwDTi7
— Ravi Shastri (@RaviShastriOfc) August 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hot hot hot. Time for some juice. Coco Bay Sheer Rocks Beautiful. Antigua 🏝 pic.twitter.com/kMLuLwDTi7
— Ravi Shastri (@RaviShastriOfc) August 26, 2019Hot hot hot. Time for some juice. Coco Bay Sheer Rocks Beautiful. Antigua 🏝 pic.twitter.com/kMLuLwDTi7
— Ravi Shastri (@RaviShastriOfc) August 26, 2019
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஆன்டிகுவா கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், பயங்கரமான வெயில் அடிப்பதால் ஜூஸ் குடிக்க வேண்டிய நேரம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ரவி சாஸ்திரியின் பயிற்சி முறையையே கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு, இந்தப் புகைப்படம் மற்றுமொரு ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. ரவி சாஸ்திரியின் புகைப்படத்தைக் கண்ட ரசிகர் ஒருவர், சாஸ்திரி தயவு செய்து உங்களது ஃபிட்னசில்(fitness) கவனம் செலுத்துங்கள் என விமர்சித்தார்.
மற்றொருவர், உங்களுக்கு ஜூஸ்ஸை விட பீர் தானே தேவைப்படும். உங்களது முழு புகைப்படத்தை வெளியிடுங்கள். அதில் உங்களது தொப்பை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் என கலாய்த்தார். இதைபோல, ரசிகர்கள் பலர் ரவி சாஸ்திரியை சமூக வலைதளங்களில் சரமாரியாக கலாய்த்துவருகின்றனர்.