இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. இதில், டிச.17ஆம் தேதி நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு நாட்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இறக்கமற்றவர் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஃபின்ச், “இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை காண நானும் அவலுடன் உள்ளேன். ஏனெனில் இரு அணிகளிலும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்கள் உள்ளனர். அதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நீங்கள் பொறுமையாக கையாள வேண்டும்.
ஒருவேளை அவர் தனது இயல்பு தன்மையை வெளிப்படுத்தினால், ஒரு இரக்கமற்றவரைப் போல நடந்துகொள்ளக்கூடும். பிறகு அவரை கட்டுப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாக மறிவிடும். இந்த விளையாட்டை சூழலிற்கு ஏற்றவாறு விளையாடுவதில் கோலியின் திறன் இன்றியமையாதது. அதனால் அவரை எவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியும் என்பதை ஆஸ்திரேலியா சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது ஆரோன் ஃபின்ச், விராட் கோலி ஆகிய இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆஸி., அணியில் ஹென்ரிக்ஸ்; காயம் காரணமாக அபேட் விலகல்!