ETV Bharat / sports

‘தாராள மனசு பாண்டியா’: நடராஜனிடம் தொடர் நாயகன் விருதை வழங்கிய ஹர்திக்! - Harthik pandya

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா, தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார்.

Natrajan tweet thanking Harthik pandya
Natrajan tweet thanking Harthik pandya
author img

By

Published : Dec 8, 2020, 7:31 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்யும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்கியது.

ஆனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஒயிட் வாஷை தவிர்த்தது. இப்போட்டிக்கு பின் இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தங்கராசுவுக்கு வழங்கி கௌரவித்தார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 தொடருக்கான கோப்பையையும் நடராஜனிடன் வழங்கினார். இப்புகைப்படத்தை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீரர் நடராஜன் டி20 கோப்பை மற்றும் தொடர் நாயகன் விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜன் தங்கராசு, முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும், கடைசி போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சஹா அரைசதத்தால் தோல்வியைத் தவிர்த்த இந்தியா ஏ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.