இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தோனி குறித்து தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், தோனி பிறந்தநாளுக்காக அவரின் சக சிஎஸ்கே அணி வீரர் பிராவோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பாடல் தோனியின் சாதனைகளையும், தோனியின் பண்புகளையும் குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்தப் பாடல், அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சிஎஸ்கே அணிக்காக பிராவோ, தோனி பல ஆண்டுகளாக விளையாடிவருகிறார்கள். இன்று காலை 11 மணிக்கு வெளியான இந்தப் பாடலை ”தோனியின் ரசிகர்களுக்கு பிறந்தநாளன்று எனது அன்பளிப்பு” எனக் குறிப்பிட்டு பிராவோ வெளியிட்டார்.
இதையும் படிங்க: தலைவன் இருக்கிறான் மறக்காதே!