இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் என இரண்டு வகை போட்டிகளிலும் பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக விளையாடி இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் 180 விக்கெட்டுகளும், 77 ஒருநாள் போட்டிகளில் 144 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக இந்தப் பண்டிகை தினத்தன்று இஸ்லாமியர்கள் தங்களது நண்பர்களுடன் உணவு பரிமாறிக் கொள்வர்.
ஆனால் கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக நாட்டில் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் இம்முறை ரமலான் பண்டிகை கலையிழந்துள்ளது.
இந்தச் சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு மட்டன் பிரியாணி, கீர் சேவாய் ஆகியவற்றை கொரியரில் அனுப்பியுள்ளதாக முகமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு கொரியர் மூலம் அனுப்பிய பிரியாணி, கீர் சேவாய் புகைப்படத்தையும் முகமது ஷமி அந்தப் பதிவில் வெளியிட்டிருந்தார்.
-
Ravi bhai app ki Seviyan ,kheer ,or Mutton biryani maine courier kardia hey Kucch time main pahunch jaega dekhlo app @RaviShastriOfc pic.twitter.com/MZSshUpz3O
— Mohammad Shami (@MdShami11) May 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ravi bhai app ki Seviyan ,kheer ,or Mutton biryani maine courier kardia hey Kucch time main pahunch jaega dekhlo app @RaviShastriOfc pic.twitter.com/MZSshUpz3O
— Mohammad Shami (@MdShami11) May 25, 2020Ravi bhai app ki Seviyan ,kheer ,or Mutton biryani maine courier kardia hey Kucch time main pahunch jaega dekhlo app @RaviShastriOfc pic.twitter.com/MZSshUpz3O
— Mohammad Shami (@MdShami11) May 25, 2020
நடப்பு ஐபிஎல் சீசனில் முகமது ஷமி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவிருந்தார். ஆனால், கரோனா தீநுண்மி காரணமாக மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடர் தேதி குறிப்பிடப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த டி20 தொடர் வரும் செப்டம்பர் 25 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இந்திய அணிக்காக மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்குவேன்’ - ஹர்பஜன் சிங்