ETV Bharat / sports

கரோனாவிலிருந்து மீண்டார் மொயின் அலி!

author img

By

Published : Jan 17, 2021, 9:05 AM IST

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் அல்ரவுண்டர் மொயின் அலி தொற்றிலிருந்து மீண்டு தற்போது அணியுடன் இணைந்துள்ளார்.

Moeen Ali back in England bubble after clearing COVID test

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இலங்கை சென்ற இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அங்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள மொயின் அலிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை (ஜனவரி 18) முதல் மொயின் அலி தனது அணியினருடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளவார் என இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'நடராஜனுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது' - ரோஹித் சர்மா நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.