சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம், கல்லணை, கால்வாய் புதுப்பிப்பு, சென்னை ஐஐடி டிஸ்கவரி கேம்பஸ் வளாக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டப் பல்வேறு அரசுத் திட்டங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன.
இந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.14) டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து, அவர் கேரளா செல்ல உள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஹெலிகாப்டரில் இருந்தபடியே கண்டு ரசித்தார்.
-
Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021Caught a fleeting view of an interesting test match in Chennai. 🏏 🇮🇳 🏴 pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘சென்னையில் நடைபெற்றுவரும் ஒரு சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியின் விரைவான பார்வை’ என பதிவிட்டு, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!