2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வருடாந்திர வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில், இந்திய மகளிர் அணியின் சச்சின் என அழைக்கப்படும் மிதாலி ராஜ் கிரேட் ஏ பிரிவிலிருந்து கிரேட் பி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவர் கடந்த ஆண்டு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிவருகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருவதால்தான் கிரேட் பி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
-
BCCI announces annual player retainership 2019-20 - Team India (Senior Women)
— BCCI Women (@BCCIWomen) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full details here -https://t.co/QP9Y6QPWfP pic.twitter.com/9iZCCDexYV
">BCCI announces annual player retainership 2019-20 - Team India (Senior Women)
— BCCI Women (@BCCIWomen) January 16, 2020
Full details here -https://t.co/QP9Y6QPWfP pic.twitter.com/9iZCCDexYVBCCI announces annual player retainership 2019-20 - Team India (Senior Women)
— BCCI Women (@BCCIWomen) January 16, 2020
Full details here -https://t.co/QP9Y6QPWfP pic.twitter.com/9iZCCDexYV
இந்த பட்டியலில் , 15 வயது வீராங்கனை ஷஃபாலி வர்மா, மற்றும் 21 வயது ஹர்லின் தியோல் ஆகியோர் முதல்முறையாக இடம்பிடித்துள்ளனர். இப்பட்டியலில் கிரேட் ஏ பிரிவில் இடம்பெற்ற வீராங்கனைகள் ஆண்டுதோறும் ஊதியம் ரூ. 50 லட்சமும், கிரேட் பி பிரிவில் உள்ள வீராங்கனைகள் ரூ. 30 லட்சமும், கிரேட் சி பிரிவில் இருக்கும் வீராங்கனைகள் ரூ. 10 லட்சம் பெறவுள்ளனர்.
கிரேட் ஏ: ஸ்மிருதி மந்தானா, ஹர்மன்ப்ரீத் கவுர், பூனம் யாதவ்
கிரேட் பி: மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, எக்தா பிஷ்ட், ராதா யாதவ், தனியா பாட்டியா, ஷிகா பாண்டே, ஜெமியா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா
கிரேட் சி: வேதா கிருஷ்ணமூர்த்தி, பூனம் ரவுத், அனுஷா பாடில், மான்சி ஜோஷி, ஹேமலதா, அருந்ததி ரெட்டி, ராஜேஸ்வரி, பூஜா வஸ்தரக்கர், ஹர்லின் தியோல், ஷஃபாலி வர்மா
இதையும் படிங்க: பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தில் தோனி இல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி