ETV Bharat / sports

'அனைத்து டி20 போட்டிகளை காட்டிலும் ஐபிஎல் சிறந்தது'- மிட்சல் சாண்ட்னர்! - பிசிசிஐ

அனைத்து விதமான டி20 போட்டிகளை விடவும் இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) சிறப்பு வாய்ந்தது என நியூசிலாந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.

Mitchell Santner feels IPL is pinnacle of all T20 tournaments

author img

By

Published : Jul 20, 2020, 6:17 PM IST

நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மிட்செல் சாண்ட்னர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் இந்தியாவின் உள்ளூர் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சாண்ட்னர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஐபிஎல் தொடரானது உலகின் மற்ற டி20 தொடர்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நான் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதையடுத்து மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஏனெனில் அந்த அணியில் ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் போன்ற உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் பேசவும், விளையாடவும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் முதல் வருடம் நான் காயமடைந்தபோது, ​​மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கடந்த முறை நான் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. நிச்சயமாக மற்ற டி 20 லீக்குகளை விட ஐபிஎல் தொடர் சிறந்த கிரிக்கெட் தொடராகும்" என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியாவுக்காக 314 போட்டிகள்... ஒரு ஒலிம்பிக் மெடல் கூட வாங்கவில்லை' - சர்தார் சிங் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.