ETV Bharat / sports

இவர்தான் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் - மெக்ராத்...! - சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் தான், தற்போதுள்ள கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

McGrath feels Pat Cummins is most complete fast bowler in world

author img

By

Published : Apr 16, 2020, 8:23 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகின் பலநாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வீரர், வீராங்கனைகளும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஜாம்பவன் கிளென் மெக்ராத், விளையாட்டு வலைதளம் ஒன்றில் கேட்கப்பட்ட 25 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அந்த வலைதளத்தின் கேள்வியில்,

தற்போதுள்ள கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் யாரை சொல்வீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல், ஆஸ்திரேலிய அணியில் பட் கம்மின்ஸை தான் நான் குறிப்பிடுவேன். ஏனெனில் அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்துவீசும் திறன் படைத்தவர் என்று தெரிவித்தார்.

பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்

அடுத்தாக நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுக்க நினைத்தால், அது யாருடைய விக்கெட்டாக இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, என்னுடைய ஹாட்ரிக் விக்கெட் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ராகுல் டிராவிட் ஆகியோரது பெயர்கள் தான் இடம்பெறும். அவர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் எடுத்தால் அது மிகப்பெறும் சரித்திர சாதனையாக மாறும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆரோக்கிய சேதுவிற்கு ஆதரவு திரட்டிய கபடி வீரர்கள் - நன்றி தெரிவித்த பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.