வந்தாரை வாழவைக்கும் நகரம் என போற்றப்படும் நம்ம மெட்ராஸ் என்கிற சென்னையின் 380ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் பெருமை குறித்து பட்டியலிட வேண்டுமென்றால் இன்று ஒருநாள் போதாது. சென்னையில் பிழைப்பை தேடிவரும் மக்கள், முதலில் சென்னையை குறித்து புலம்பி தள்ளினாலும் அவர்களில் பெரும்பாலானோர் சென்னையை விட்டு வேறு ஊருக்கு செல்லமாட்டார்கள். ஏனெனில், அவர்களை வாழ வைப்பதே இந்த சிங்காரச் சென்னைதான்.
மாட்டுக்கும் ஆதார்ட் கார்ட் தேவை என்று சொல்லும் இந்த சமுதாயத்தில், ஆதார் இல்லாமல் சுற்றித்திரியும் வட இந்தியர்களுக்கும் சென்னைதான் அடைக்கலம் தருகிறது. பலதரப்பட்ட மக்களின் கலாச்சாரங்களும் பாஷைகளும் சென்னையில் மட்டும்தான் பார்க்கமுடியும். சென்னை தினத்தை முன்னிட்டு, பல்வேறு தரப்பினரும் சென்னையின் பெருமைகள் குறித்து சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்து வரும் நிலையில், சிஎஸ்கே தமிழ்ப் புலவரான ஹர்பஜன் சிங்கும் கூலான ஸ்டேட்டஸ் ஒன்றை பிடித்துள்ளார்.
-
கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி"
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy #chennaiday #MadrasDay #Madras380
">கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி"
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2019
Happy #chennaiday #MadrasDay #Madras380கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி"
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2019
Happy #chennaiday #MadrasDay #Madras380
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், 'கலீஜ், டௌலட், பிசுக்கோத், நைனா, ஓசி, பிஸ்து, அட்டு, பேஜார், அள்ளு, தல, மாமி, மாமே, இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க. ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி" என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018ஆம் ஆண்டிலிருந்து விளையாடிவரும் ஹர்பஜன் சிங், தமிழ் நாட்டு மக்களை கவரும் வகையில் அவ்வபோது பல பதிவுகளை தமிழில் பதிவுசெய்துவருகிறார். இருப்பினும், சென்னை தினம் குறித்து அவரது பதிவு சென்னை வாசிகளை மிகவும் கவர்ந்துள்ளது.