இந்தியாவின் முதல் தர உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசம் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின், முகுந்த், விஜய் சங்கர் என நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தமிழ்நாடு அணி களமிறங்கியது.
இதில் டாஸை வென்ற மத்திய பிரதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கங்கா ஸ்ரீதர் - கேப்டன் பாபா அப்ரஜித் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ஸ்ரீதர் 43 ரன்களில் வெளியேற, அவருக்கு அடுத்துவந்த மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் பொறுப்புடன் ஆடிய பாபா அப்ரஜித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களை விளாசினார். இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. மத்திய பிரதேச பந்துவீச்சில் ஈஸ்வர் பாண்டே அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி ரமீஸ் கான், வெங்கடேஷ் ஐயர், ஹிர்வானி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 333 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 88 ரன்களை சேர்த்தார். தமிழ்நாடு அணி சார்பில் நடராஜன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 184 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் - கவுசிக் காந்தி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஜெகதீசன் 54 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்கு அடுத்துவந்த பெரிதாக சோபிக்காததால் மூன்றாம் நாளான நேற்று தமிழ்நாடு அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்திருந்தது. கவுசிக் 66 ரன்களுடனும், பாபா அப்ரஜித் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
-
WATCH: Kaushik Gandhi's 154 off 340 balls against Madhya Pradesh.
— BCCI Domestic (@BCCIdomestic) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Video here 👉👉 https://t.co/09vI3SnvEu#MPvTN #RanjiTrophy @paytm @TNCACricket pic.twitter.com/CzHIUlaxQ4
">WATCH: Kaushik Gandhi's 154 off 340 balls against Madhya Pradesh.
— BCCI Domestic (@BCCIdomestic) December 28, 2019
Video here 👉👉 https://t.co/09vI3SnvEu#MPvTN #RanjiTrophy @paytm @TNCACricket pic.twitter.com/CzHIUlaxQ4WATCH: Kaushik Gandhi's 154 off 340 balls against Madhya Pradesh.
— BCCI Domestic (@BCCIdomestic) December 28, 2019
Video here 👉👉 https://t.co/09vI3SnvEu#MPvTN #RanjiTrophy @paytm @TNCACricket pic.twitter.com/CzHIUlaxQ4
இதனிடையே இன்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தமிழ்நாடு அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய பாபா அப்ரஜித் 39 ரன்னில் வெளியேற, கவுசிக் காந்தியும் 154 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் தமிழ்நாடு அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 377 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இப்போட்டி டிராவில் நிறைவடைந்தது.
-
#TNvMP | Day 4
— TNCA (@TNCACricket) December 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kaushik's brilliant 154 helped TN post a 193 run lead in 2nd innings, as the match is drawn in Indore
MP claim 3 points by securing the first innings lead, with Ishwar Pandey declared as MoM for scalping 7 wickets
Scores ➡️https://t.co/igoxkLdJSy#RanjiTrophy pic.twitter.com/4BtLchkPzm
">#TNvMP | Day 4
— TNCA (@TNCACricket) December 28, 2019

Scores ➡️https://t.co/igoxkLdJSy#RanjiTrophy pic.twitter.com/4BtLchkPzm#TNvMP | Day 4
— TNCA (@TNCACricket) December 28, 2019
Kaushik's brilliant 154 helped TN post a 193 run lead in 2nd innings, as the match is drawn in Indore
MP claim 3 points by securing the first innings lead, with Ishwar Pandey declared as MoM for scalping 7 wickets
Scores ➡️https://t.co/igoxkLdJSy#RanjiTrophy pic.twitter.com/4BtLchkPzm
இப்போட்டியில் சதமடித்து அசத்திய தமிழ்நாடு அணியின் கவுசிக் காந்தியும், முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மத்திய பிரதேச அணியின் ஈஸ்வர் பாண்டேவும் ஆட்டநாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சுடுதலில் தேசிய பதக்கம் - மதுரை மாணவர் சாம் ஜார்ஜ் சாதனை