ETV Bharat / sports

இங்கிலாந்து அணியிலிருந்து ஓய்வு பெற்றார் நட்சத்திர வீராங்கனை!

லண்டன்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான லாரா மார்ஷ் அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Laura Marsh
Laura Marsh
author img

By

Published : Dec 17, 2019, 8:48 AM IST

இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் லாரா மார்ஷ். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய லாரா, இதுவரை 103 ஒருநாள், 67 டி20 போட்டிகள், ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக பங்கேற்றார்.

இவர் தனது சுழற்பந்துவீச்சினால், ஒருநாள் போட்டிகளில் 129 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகள், டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்டுகள் என இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் 217 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய லாரா, நேற்று அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இத்தகவலை அறிந்த கிரிக்கெட் வீராங்கனைகள் லாரா மார்ஷ்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • England spinner Laura Marsh has announced her retirement from international cricket.

    Marsh took 217 wickets for her country over a 13-year international career and is the most successful spinner in the history of English women's cricket 👏 pic.twitter.com/sHiA9lhJCU

    — ICC (@ICC) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இவர் 2009ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 85 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் சரித்திர சாதனைப் படைத்த ஜார்கண்ட்!

Intro:Body:

England spinner Laura Marsh has announced her retirement from international cricke

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.