ETV Bharat / state

சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல்: தேவியின் வெற்றி செல்லாது; நீதிமன்றம் உத்தரவு! - SANKARAPURAM PANCHAYAT ELECTION

காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 12:30 PM IST

மதுரை: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது எனவும், தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவரின் வெற்றி தான் செல்லும் என்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் மாங்குடி அவரின் மனைவி தேவி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் (2019) நடைபெற்றது. 2020 ஜனவரி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் நான் (தேவி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் எனக்கு வழங்கப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக கூறி அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து, நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரணை செய்த நீதிமன்றங்கள் தேவியின் வெற்றி செல்லும் என அறிவித்தது. மேலும், பிரியதர்ஷினி விசாரணை நீதிமன்றத்தை நாடி தனது தேர்தல் வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. நீதிமன்ற உத்தரவின் படி, பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தேவியின் வெற்றி செல்லாது பிரியதர்ஷினி வெற்றி தான் செல்லும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள்; சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

இதனையடுத்து, சிவகங்கை விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என தேவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகியுள்ளார்.

அப்போது அவர், “விசாரணை நீதிமன்றம் மிகச் சரியாக விசாரணை செய்து பிரியதர்ஷினி வெற்றியை உறுதிப்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டு தொகையில்தான் வேறுபாடு வந்தது. மீண்டும் கூட்டி வாக்குகளை எண்ணும் போது பிரியதர்ஷினி வெற்றி உறுதி செய்யப்பட்டது. எனவே, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த வேண்டும். தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அரசு தரப்பின் வாதத்தை பதிவு செய்த நீதிபதி, தேவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி வெற்றியை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.