2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரின் நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி முன்னேற முடியும் என்ற சூழலில், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 161 ரன்களை விரட்டியபோது 49 ரன்களுக்கு முக்கிய மூன்று விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது.
அப்போது களமிறங்கிய யுவராஜ் சிங் - கோலியுடன் இணைந்து சிறிது நேரம் தாக்கு பிடித்தார். பின்னர் அணியின் ஸ்கோர் 94 ரன்களாக இருக்கையில் யுவராஜ் சிங்கும் ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் செல்வது போல் இருந்தது.
அதையடுத்து வந்த தோனி - கோலியுடன் இணைந்தார். இவர்கள் மேலும் விக்கெட்டுகள் விழாமல் அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர். அப்போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி அதிரடியாக பவுண்டரிகள் விளாசுவதைவிட ஒன்று, இரண்டு என ரன்களை வேகமாக ஓடி எடுத்தனர்.
![விராட் கோலி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4417117_kojli.jpg)
'singles wins matches' என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அந்த போட்டி அமைந்தது. அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி நினைவினை பகிர்ந்துள்ளார்.
அதில், ”அது என்றும் என்னால் மறக்க முடியாத ஒரு இரவு. அந்த மனிதர் (தோனி) என்னை உடற்தகுதி தேர்விற்கு ஓடுவதைப்போல் ஓட வைத்தார்” எனப் பதிவ்ட்டுள்ளார்.