பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருது வழங்குவது வழக்கம். அதன்படி 2011- 2020 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
ஐசிசியின் கடந்த பத்தாண்டுகளில் ஒருநாள், டி20, டெஸ்ட் வீரர் மற்றும் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது ஆகிய அனைத்து பிரிவுகளுக்கான சிறந்து விளங்கிய வீரருக்கான விருதுகளுக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணியின் சேஸிங்கின் போது விராட் கோலியின் ஆட்டம் சிறப்பு வய்ந்தாக அமைந்திருந்தது. என்னைப் பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் தனிநபர் ஆதிக்கத்தை பார்த்தால் அது விராட் கோலியாக மட்டும் தான் இருக்கும்.
-
🏅 During the awards period:
— ICC (@ICC) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔸 Leading run-scorer in men's T20Is – 2768 at 50.32
🔸 Leading run-scorer in @T20WorldCup matches – 777 at 86.33
India superstar Virat Kohli is a nominee for the ICC Men's T20I Player of the Decade award!
VOTE 👉 https://t.co/Ib6lqGqUOi pic.twitter.com/1VDyLdT47B
">🏅 During the awards period:
— ICC (@ICC) November 28, 2020
🔸 Leading run-scorer in men's T20Is – 2768 at 50.32
🔸 Leading run-scorer in @T20WorldCup matches – 777 at 86.33
India superstar Virat Kohli is a nominee for the ICC Men's T20I Player of the Decade award!
VOTE 👉 https://t.co/Ib6lqGqUOi pic.twitter.com/1VDyLdT47B🏅 During the awards period:
— ICC (@ICC) November 28, 2020
🔸 Leading run-scorer in men's T20Is – 2768 at 50.32
🔸 Leading run-scorer in @T20WorldCup matches – 777 at 86.33
India superstar Virat Kohli is a nominee for the ICC Men's T20I Player of the Decade award!
VOTE 👉 https://t.co/Ib6lqGqUOi pic.twitter.com/1VDyLdT47B
ஏனெனில் ஒவ்வொரு போட்டின் போதும் விராட் கோலி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இந்த தசாப்தத்தின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் கோலி இதுவரை 251 போட்டிகளில் பங்கேற்று 12,043 ரன்களை குவித்துள்ளார். இதில் 43 சதங்களும் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.
இதையும் படிங்க:‘ஸ்லோ ஓவர்ரேட்’ இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!