ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் வாக். இவர், ‘கேப்சரிங் கிரிக்கெட்: வாக் இன் இந்தியா’ என்ற ஒரு மணி நேர ஆவணப் படத்தின் வெளியீட்டு விழாவில் இன்று பங்கேற்றார். அப்போது அவர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதுள்ள காலத்தின் மாடர்ன் டே ஹீரோ என பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் வாக், கோலியிடம் இந்தியர்கள் விரும்புவது என்ன என்றால், கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் புதிய அணுகுமுறை, எது நடந்தாலும் சாதித்துக் காட்டும் திறன். அதனால்தான் அவர் ‘மாடர்ன் டே ஹீரோ’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டீவ் வாக், “கிரிக்கெட் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அதிலும், கிரிக்கெட் மற்றும் புகைப்படம் எடுத்தல் இரண்டும் எனது உணர்வுகளை உள்ளடக்கியது. 1986ஆம் ஆண்டு நான் இந்தியாவுடன் முதல் சுற்றுப்பயணத்தில் விளையாட வந்திருந்தேன். அப்போது தான் இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டை எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதை உணர்ந்தேன்.
அதேபோல் இந்தியாவில் எனக்கு பிடித்த இடங்கள் குறித்து கூறவேண்டும் என்றால், தாஜ்மஹால், சின்னசாமி கிரிக்கெட் மைதானம், மகாராஜா லட்சுமி விலாஸ் அரண்மனை, ஓவல் மைதானம், மற்றும் டெல்லி, கொல்கத்தா பகுதிகளை சுற்றியது எனக்கு வாழ்நாள் நினைவுகளை கொடுத்துள்ளன” என்றார்.
இதயும் படிங்க: 'கோலியிடமிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது' - கிளென் மேக்ஸ்வெல்