ETV Bharat / sports

உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவின் சிறப்புகள்! - உலகில் மிகப் பெரிய கிரிகெட் மைதானம்

டெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ள சர்வதேச அளவில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அது குறித்த செய்தித் தொகுப்பு...

Trump visit to India
Trump visit to India
author img

By

Published : Feb 19, 2020, 9:13 AM IST

பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான இந்த மொடீரா மைதனத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.

அகமதாபாத்தின் சபர்பதி என்ற பகுதியில் 800 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் கட்டுமான பணி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்க்கக்கூடிய மெல்பர்ன் கிரிக்கெட் மைதனத்தைவிட, இந்த மைதானம் பெரியது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த பழைய மொடீரா மைதானம் இடிக்கப்பட்டு, இந்த புதிய மைதானம் கட்டப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் செம்மண் மூலம் உருவாக்கப்பட்ட 11 கிரிக்கெட் பிட்சுகள் இந்த மைதானத்தில் உள்ளன. இதேபோல, தூண்கள் இல்லாமல் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிரிக்கெட் மைதானம் இதுவாகும். இதன் மூலம் பார்வையாளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் போட்டியின் ஒவ்வொரு நொடியையும் கண்டுகளிக்கலாம்.

இந்த மைதானத்தில் தூண்கள் அமைத்து விளக்குகளைப் பொருத்துவதற்கு பதில், 90 மீட்டர் உயரத்தில் மைதான மேற்கூரையின் முகப்பில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள வேறெந்த மைதானத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த மைதானத்தில் 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், எவ்வளவு மழை பெய்தாலும் வெறும் 30 நிமிடத்தில் மொத்த மழை நீரும் வெளியேற்றப்பட்டு, ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும். மைதானத்தை தவிர பயிற்சிக்காக இரு கிரிக்கெட் மைதானங்களும் இதில் உள்ளன. மேலும், இந்த மைதானத்தில் கிரிக்கெட் அகாடமி ஒன்றும் செயல்படவுள்ளது.

மைதானத்துக்கு வெளியே ஒரே நேரத்தில் மூவாயிரம் கார்கள், பத்தாயிரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஏதுவாக பிரம்மாண்ட பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் வடக்கு பெவிலியனுக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரும், தெற்கு பெவிலியனுக்கு அதானி குழுமத்தின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவின் சிறப்புகள்!

கிரிக்கெட்டைத் தவிர கால்பந்து, ஹாக்கி, கோகோ, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளையும் இந்த மைதானத்தில் நடத்தலாம். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த L & T நிறுவனம்தான், இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மொடீரா மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து மைதானத்தில் குழும உள்ள ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.

இதையும் படிங்க: கோலியை வீழ்த்தவே கிரிக்கெட் விளையாடுகிறேன் - டிரெண்ட் போல்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.