இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் பார்த்தீவ் படேல். இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் கே.எல். ராகுல், ரிஷப் பந்த் பற்றிய தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய பார்த்தீவ், ”தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்படுவாரா? என்பது தெரியவில்லை. ஏனெனில் ஒரு சில சர்வதேச போட்டிகளை வைத்து நாம் எதையும் முடிவுசெய்ய இயலாது.
அதேபோல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராகுலை தேர்வு செய்வது என்னைப் பொறுத்த வரையில் சிறந்த யோசனை கிடையாது. ஏனெனில், உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாடும்போது அதிக முன்னனுபவம் உள்ள வீரர்களையும் கீப்பிங் பணிக்கு நியமிப்பதே சிறந்தாக இருக்கும். என்னைப் பொறுத்த வரையிக் கே.எல். ராகுல் இந்திய அணியின் தற்போதைய தீர்வு மட்டுமே ஆவார்.
மேலும் ரிஷப் பந்த்தை பொறுத்தவரையில் அவர் சிறந்த வீரர் தான். ஏனெனில் ஐபிஎல், உள்ளூர் தொடர்களில் அவர் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அவர் தனது பேட்டிங்கில் கவனத்தைச் செலுத்தினால் அது அவருக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘வணக்கண்டா மாப்ள, சேலத்துல இருந்து’ - அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிட்ட சேலம் ஸ்பார்டன்ஸ்!