ETV Bharat / sports

ஐபிஎல் அட்டவணையில் அதிசயம் - கொல்கத்தா அணியின் தலைமை அதிகாரி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைப் பட்டியலில் அதிசயம் நிகழ்ந்துள்ளதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணி
author img

By

Published : Mar 20, 2019, 10:31 PM IST

Updated : Mar 20, 2019, 10:40 PM IST

2019 ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அதேவேளையில் மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் சற்று முன்னதாகவே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது.

இதனால், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கான ஒட்டுமொத்த அட்டவணையையும் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் படியாக அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அணி நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

எட்டு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் மொத்தமாக 14 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அதில் 7 ஆட்டங்கள் சொந்த மைதானத்திலும், 7 ஆட்டங்கள் வெளியூர் மைதானங்களிலும் நடைபெறும். நேற்றைய அறிவிப்பால் அனைத்து அணிகளும் தங்களது ஊரில் விளையாடும் போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியானது.

இந்த அட்டவணை குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியதாவது,

நேற்று வெளியான ஐபிஎல் அட்டவணைப் பட்டியல் மகிழ்ச்சி அளிக்கும்படியாக உள்ளது. இந்த வருடம் தேர்தல் நடைபெற்றாலும் ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யாமல் வெளியிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேற்கு வங்க மாநிலத்தில் இம்முறை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எனினும் கொல்கத்தா அணிகள் ஆடும் போட்டிகளை சொந்த ஊரிலேயே நடத்த உதவி புரிவதாக உறுதியளித்த மேற்கு வங்க காவல்துறையினருக்கும் நன்றிகள்.

இது அணிகளுக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் நல்ல செய்தியாகும். இதனால் அவர்கள் கொல்கத்தா அணியின் உள்ளூர் போட்டிகளை ஈடன் கார்டன் மைதானத்திலேயே காண முடியும். இந்த அட்டவணை நிச்சயமாக ஒரு அதிசயம் மொத்தத்தில், இது ஒரு சிறந்த அட்டவணை என அவர் தெரிவித்தார்.

வரும் 24 ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Intro:Body:

KKR playing all games at home a 'miracle': CEO

Conclusion:
Last Updated : Mar 20, 2019, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.