தற்போது நடைபெற்றுவரும் டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று காரைக்குடி காளைகள் அணி, திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் விளையாடிய காரைக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
அதன் பின் ஆடிய திருச்சி அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறியது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யின் அதிரடி ஆட்டத்தால் போட்டி சமனானது.
அதிரடியாக ஆடிய முரளி விஜய் 56 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.இதன் மூலம் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது.
பின் சூப்பர் ஓவர் முறையில் முதலில் ஆடிய திருச்சி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்தது. அதன் பின் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய காரைக்குடி அணி 13 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.
சிறப்பாக விளையாடி, அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர் அனிருதா ஸ்ரீகாந்த் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.