ETV Bharat / sports

ராணா, கல்ரா, மாவி மூவருக்கும் சமமான நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் - கல்ராவுக்கு தடை

டெல்லி: வயது குறித்த தவறான தகவல்கள் அளித்த புகாரில் சிக்கிய மூன்று வீரர்களான கல்ரா, நிதீஷ் ராணா, சிவம் மாவி ஆகியோருக்கு ஒரே மாதிரியான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

kalra-rana-and-mavi-should-have-got-uniform-order-ddca-official

author img

By

Published : Jan 3, 2020, 7:53 AM IST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய கல்ராவுக்கு, ஜூனியர் கிரிக்கெட்டில் வயது குறித்த தவறான தகவல்கள் அளித்த காரணங்களால் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நடுநிலையாளரான (ஆம்புட்ஸ்மேன்) பாதர் துரெஸ் வழங்கியபின், அவர் ஓய்வில் சென்றார்.

கல்ரா
கல்ரா

இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ”கல்ரா ரஞ்சி டிராபி தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக களமிறங்கயிருந்தார். ஆனால் இனி ஆட முடியாது. இதேபோன்ற தண்டனைகள் ராணா, மாவி ஆகியோருக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு வீரருக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டு, மற்றொரு வீரருக்கு ஆவணங்கள் சரிபார்ப்போம் என்றும் இன்னொரு வீரருக்கு பிசிசிஐ விசாரணை செய்யும் எனக் கூறுவது சரியல்ல.

ராணா, மாவி
ராணா, மாவி

நிதிஷ் ராணா விவகாரத்தில் புதிய நடுநிலையாளர் வந்தபின் விசாரிக்கப்படும். அவர் ராணா சமர்பித்த தகவல்களைச் சரிபார்ப்பார். இந்த வீரர்கள் அனைவரும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றபோது வயது குறித்த தவறான தகவல்கள் அளித்துள்ளனர் எனத் தெரியவந்ததோடு, அனைவரும் தற்போது மாநில கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பதால் வீரர்களின் நலன் குறித்தும் ஆலோசிக்கப்படும்” எனக் கூறினர்.

இதையும் படிங்க: அடுத்த மேட்ச் ஜெய்க்கனும்னா அணியிலிருந்து இவர்களில் ஒருவரை நீக்குங்கள் - பீட்டர்சன் டிப்ஸ்

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/kalra-rana-and-mavi-should-have-got-uniform-order-ddca-official/na20200102130953480

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.