13ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் கரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இத்தொடருக்கான அட்டவணை இன்று (செப்.06) வெளியாகி உள்ளது. அதன்படி, இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகான இடம் மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை. அதனால் அப்போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க:யூ.எஸ்.ஓபன்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய போபண்ணா இணை!