ETV Bharat / sports

ஐபிஎல் பரிசுத் தொகை குறைப்பு - பிசிசிஐ அறிவிப்பு

author img

By

Published : Mar 4, 2020, 7:37 PM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனில் கோப்பை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை குறைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல், ipl
ஐபிஎல், ipl

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இம்மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தத் தொடருக்காக அனைத்து அணியினரும் தயாராகிவரும் நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு ஐபிஎல் அணி நிர்வாகத்தினரை அதிர்ச்சில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல், ipl
பரிசுத் தொகையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வருகின்ற சீசனில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை ரூ.10 கோடியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல், ipl
ஐபிஎல் 2020 புதிய விதிமுறைகள்

ஏனெனில் கடந்தாண்டுவரை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்தாண்டு முதல் அந்தத் தொகை பாதியாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருப்பது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகையும் ரூ.12.5 கோடியிலிருந்து ரூ.6.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. குவாலிபயர் போட்டிகளில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.4.37 கோடி வழங்கப்படும். செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வருமானம் கிடைப்பதால் அனைத்து அணிகளும் மிகுந்த செல்வத்துடன் உள்ளன. இதன் காரணமாகவே பரிசுத் தொகை குறைக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இது தவிர்த்து இந்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் மாநில கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐபிஎல் அணிகள், பிசிசிஐ சார்பில் தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும். பிசிசிஐ நடுநிலை ஊழியர்களுக்கு இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு பயண நேரம் குறைவு என்பதால், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.