இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. சுதந்திர தினத்தன்று தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, தானும் ஓய்வை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்னை அணியினர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஆக. 28) சென்னை அணியைச் சேர்ந்தவர்களில் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆக. 29) சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரெய்னாவுக்கு, சென்னை அணி நிர்வாகம் தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.
— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
KS Viswanathan
CEO
">Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.
— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020
KS Viswanathan
CEOSuresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.
— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020
KS Viswanathan
CEO
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ள ரெய்னா, தொடரிலிருந்து முழுவதுமாக விலகுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம்: தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்!