ஐபிஎல் போட்டித் தொடர் முதன்முதலில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் டிஆர்பி புதிய உச்சத்தை தொட்டு, பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது.
இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த 13ஆவது ஐபிஎல் தொடர், ஐக்கிய அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான டிஆர்பி புள்ளிகளை பார்க் (BARC-Broadcast Audience Research Council) அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.
21 சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட முதல் 41 ஐபிஎல் போட்டிகள், 7 பில்லியன் நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 28 விழுக்காடு அதிகமாகும். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 5.5 பில்லியன் நிமிடங்களே ஐபிஎல் பார்க்கப்பட்டது.
இது குறித்து பார்க் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு முந்தைய நிலையில் எதையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஐபிஎல் ஒரு வரப்பிரசாதம். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஐபிஎல் தொடரின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
It's getting a tad interesting here at the Points Table. What are your predictions for the playoffs?#Dream11IPL pic.twitter.com/xcXTYIpWdg
— IndianPremierLeague (@IPL) October 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It's getting a tad interesting here at the Points Table. What are your predictions for the playoffs?#Dream11IPL pic.twitter.com/xcXTYIpWdg
— IndianPremierLeague (@IPL) October 30, 2020It's getting a tad interesting here at the Points Table. What are your predictions for the playoffs?#Dream11IPL pic.twitter.com/xcXTYIpWdg
— IndianPremierLeague (@IPL) October 30, 2020
இந்தாண்டு கரோனா காரணமாக ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாபின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்...!